அன்று தளபதி விஜய்க்கு நடந்ததே இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நடந்ததா?

அன்று தளபதி விஜய்க்கு நடந்ததே இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நடந்ததா?

‘கூலி’ படத்துல ஹீரோ ரஜினியா, வில்லன் நாகார்ஜுனாவா? மாஸ் காட்டிய வில்லன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம், எதிர்பார்த்ததை போலவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், படம் பார்த்த அனைவரும் ஒரே கேள்வியைத் தான் கேட்கிறார்கள். அது, “கூலி படத்தில் ஹீரோ ரஜினியா, இல்லை வில்லன் நாகார்ஜுனாவா?” என்பதுதான்.

படத்தில் ரஜினியின் ஸ்டைல், மாஸ், நடை என அனைத்தும் இருந்தாலும், வில்லனாக நடித்திருக்கும் நாகார்ஜுனாதான் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதிலும், தெலுங்கு சினிமா ரசிகர்கள், “எங்கள் கிங் நாகார்ஜுனாவின் கெத்தைக் பார்த்தீர்களா? அவரின் ஸ்டைலை பார்த்தீர்களா? தமிழ் பெண்களே அவரைக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள்” என்று சமூக வலைத்தளங்களில் வைரல் பதிவுகளைப் போட்டு கொண்டாடுகிறார்கள்.

விஜய்க்கு நடந்த ‘மாஸ்டர்’ மேஜிக்!

இது, ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு நடந்த சம்பவத்தை அப்படியே நினைவூட்டுகிறது. விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்த அந்த படத்தில், மக்கள் செல்வனின் மிரட்டலான வில்லத்தனம், ஹீரோவை விட அதிகமாகப் பேசப்பட்டது. “விஜய் சேதுபதி என்னம்மா மிரட்டியிருக்கிறார்!” என ரசிகர்கள் அவரைப் பற்றி மட்டுமே பேசி வந்தனர். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்றைய விஜய் சேதுபதி; இன்றைய நாகார்ஜுனா!

விஜய்க்கு நடந்தது போல, தற்போது ரஜினிகாந்துக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம், ரஜினியின் கதாபாத்திரத்திற்கு இணையாகவும், சில சமயங்களில் அதை விட மாஸாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நாகார்ஜுனா இறக்கும் காட்சிக்குப் பிறகு படம் சலிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் சிலர் விமர்சித்தனர். இது, படத்தின் வெற்றிக்கு நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

படத்தின் ஷூட்டிங் சமயத்திலேயே நாகார்ஜுனா, “எனது கதாபாத்திரம் மிகவும் பவர்புல்லானது” என கூறியபோதும், அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், படம் வெளியான பிறகுதான் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிந்தது.

மொத்தத்தில், லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு என்ன செய்தாரோ, அதை இப்போது கூலி படத்தில் ரஜினிக்கும் செய்து, மீண்டும் ஒருமுறை வில்லனை ஹீரோவுக்கு இணையாகக் கொண்டாட வைத்திருக்கிறார்.