ஈரான் சில வாரங்களில் தனது ராணுவத்தை பலமாக்கியுள்ளது, போதாக்குறைக்கு எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஈரான் மக்கள் அதி உச்ச தலைவர் அலி கமேனிக்கு எதிராக போராடினார்கள். அது நாட்டில் உயர்ந்த விலைவாசி காரணமாகத் தான். ஆனால் அமெரிக்கா போர் தொடுத்ததும் , கமே ஐயா கொல்லப்பட்ட பின்னரும், ஈரான் மக்கள் அப்படியே மாறிவிட்டார்கள். இதனால் அமெரிக்கா எதிர்பார்த்த ஒரு பெரும் விடையம் நடக்கவில்லை.
ஈரானை ராணுவ பலத்தால் பணிய வைக்க அமெரிக்கா ஏன் தயங்குகிறது என்பதற்குப் பின்னால் பல பீதியூட்டும் காரணங்கள் உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்கா கப்பல்களை அனுப்பினால், அவர்கள் மூன்று அடுக்குத் தடைகளைத் தாண்டியாக வேண்டும். முதல் தடையான கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் (Naval Mines), வெறும் 35 மைல் அகலம் கொண்ட அந்த குறுகிய பாதையை மரணப் பொறியாக மாற்றிவிடுகின்றன. அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல்கள் கூட ஒரு சில கண்ணிவெடிகளால் சிதறிப்போகும் அபாயம் உள்ளதால், ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாமல் அமெரிக்கப் படை திகைத்து நிற்கிறது.
ஈரானியக் கரையில் உள்ள உயரமான மலைகள் ஈரானுக்குப் பெரும் பலமாக உள்ளன. அங்கிருந்து ஈரானின் ட்ரோன்களும், ஏவுகணைகளும் அமெரிக்கக் கப்பல்களை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கின்றன. இந்த மலைகளுக்குப் பின்னால் ரகசியமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணைத் தளங்களில் இருந்து எப்போது தாக்குதல் வரும் என்று தெரியாமல் அமெரிக்க வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். இது ஒருபுறமிருக்க, ஈரானின் ‘ஸ்பீட் போட்கள்’ (Speedboats) கூட்டமாக வந்து நடத்தும் ‘சுவர்ம்’ (Swarm) ரகத் தாக்குதல்கள் அமெரிக்காவின் நவீனப் போர்க்கப்பல்களைக் கூட நிலைகுலையச் செய்யும் வல்லமை கொண்டவை.
இந்த ராணுவச் சிக்கல்கள் காரணமாகவே, “ஈரானிய நாகரிகத்தையே அழிப்பேன்” என்று மிரட்டிய ட்ரம்ப், தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளார். பல ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்து இந்தப் பாதையைத் திறப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளதால், இந்த இரண்டு வார கால யுத்த நிறுத்தம் இரு தரப்பிற்குமே ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், இந்தப் பாதையைச் சுற்றியுள்ள பதற்றம் இன்னும் குறையவில்லை என்பதுதான் உலக நாடுகளின் கவலையாக இருக்கிறது.