இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI), புதிய பெயர்களில் பயங்கரவாத அமைப்புகளைத் தொடங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புகளுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, PFI மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள், இந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குறித்த பட்டியலைத் தயாரித்து, தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, சென்னை, மதுரை, கடலூர், இராமநாதபுரம், தொண்டி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளின் மூலம் பயங்கரவாதச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.