ரஷ்யாவில் இணையப் போர்: வெளிநாட்டு செயலிகளுக்கு மூடு விழா!

ரஷ்யாவில் இணையப் போர்: வெளிநாட்டு செயலிகளுக்கு மூடு விழா!

ஒரு பக்கம் உக்ரைன்-ரஷ்யா போர்! இன்னொரு பக்கம் இணையப் போர்! உக்ரைன் டிரோன் தாக்குதல்களைத் தடுக்க அடிக்கடி இணையத்தை முடக்கி வரும் ரஷ்யா, இப்போது ஒரு புதிய உத்தரவை வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ரகசியப் பட்டியல் வெளியானது!

இணையம் முடக்கப்பட்டாலும் தடையின்றி இயங்கும் உள்ளூர் செயலிகளின் ரகசியப் பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம், ஆன்லைன் அரசாங்க சேவைகள், உள்ளூர் சந்தைகள் மற்றும் “மிர” மின்னணு கட்டண முறைமை போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும் என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்படும் வாட்ஸ்அப்!

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! இந்த பட்டியலில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான வெளிநாட்டு செயலிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரஷியாவில் 97.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் இந்த பட்டியலில் இல்லாதது, அதன் எதிர்காலம் குறித்து பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

பயங்கரமான காரணம்!

“பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான இந்த நடவடிக்கை, குடிமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும்,” என்று ரஷ்ய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம், வெளிநாட்டு செயலிகளை முற்றிலுமாக அகற்றி, இணையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் என்று சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த அதிரடி நடவடிக்கை, புவிசார் அரசியல் போட்டிகள் தொழில்நுட்பத்தின் மீதும் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதற்கான ஒரு உதாரணம். உள்நாட்டு தொழில்நுட்பங்களை வளர்த்து, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது ரஷ்யா!