அமெரிக்க தளம் டோகாவில் இருந்தும் எப்படி இஸ்ரேல் டோகாவில் தாக்குதல் நடத்தியது ?

அமெரிக்க தளம் டோகாவில் இருந்தும் எப்படி இஸ்ரேல் டோகாவில் தாக்குதல் நடத்தியது ?

கடந்த 2 தினங்களுக்கு முன்னர், இஸ்ரேல் கட்டார் தலைநகர் டோகாவில், விமான தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சிலர் டோகாவில் கூடியிருந்த வேளை திடீரென, கட்டார் வான் பரப்பினுள் நுளைந்த இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை நடத்தி இருந்தது. இதில் ஹமாஸ் தலைவர்கள் தப்பி விட்டார்கள். இருப்பினும் இந்த தாக்குதலை கட்டார் அரசு வன்மையாக கண்டித்துள்ள நிலையில். அமெரிக்கா தனக்கு எதுவும் தெரியாது என்று கையை விரித்து விட்டது.

ஆனால் கட்டாரில் உள்ள டோகாவில் அமெரிக்காவின் மிகப் பெரிய வான் படைத் தளம் உள்ளது. அதேபோல பிரித்தானியாவின் வான் படைத் தளம் உள்ளது. அங்கே பல சக்த்திவாய்ந்த ராடர்கள் உள்ளது. அதில் சிக்காமல் இஸ்ரேல் விமானங்க உள்ளே நுளைய வாய்ப்பே இல்லை. இதனால் அமெரிக்க படை அதிகாரிகளுக்கு இந்த தாக்குதல் நடக்கப் போகிறது என்பது முன்னரே தெரியும். ஆனால் அவர்கள் அதனை கட்டார் அரசுக்கு தெரிவிக்கவில்லை. இது தான் இப்படி என்று பார்த்தால்.

மறு முனையில் பேச்சு வார்த்தை ஒன்றுக்கு வருமாறு ஹமாஸ் தலைவர்களை அமெரிக்கா தான் மறைமுகமாக அழைத்துள்ளது. இதற்காகவே ஹமாஸ் தலைவர்கள் கட்டாரில் ஒன்று கூடி உள்ளார்கள். அந்த நேரத்தில் சொல்லி வைத்தால் போல இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வரவளைத்து அனைவரையும் போட்டுத் தள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக சதி ஒன்றை செய்துள்ளார்கள். ஆனால் இம்முறை அது பலிக்கவில்லை. காரணம் ஹமாஸ் தலைவர்கள் உஷாராக இருந்துள்ளார்கள்.

மேலும் சொல்லப் போனால் தாக்குதல் நடக்க 5 நிமிடங்களுக்கு முன்னரே ஸ்ரேல் தமக்கு இந்த தாக்குதல் விடையம் தொடர்பாக அறிவித்தது என்று அமெரிக்க படை தரப்பு தெரிவித்துள்ளது. இதனை கட்டார் அரசுக்கு தெரிவிக்க முன்னரே தாக்குதல் நடந்து விட்டது என்று கூறி அமெரிக்கா தப்பித்துள்ளது. ஆனால் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்று கட்டார் அரசுக்கு நன்றாக புரிந்து இருக்கும். இனி மிகவும் கவனமாக அவர்கள் இருப்பார்கள்.