விஜய் ரசிகர்கள் உற்சாகம்: தவெக மாநாட்டில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா?

விஜய் ரசிகர்கள் உற்சாகம்: தவெக மாநாட்டில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா?

நடிகர் விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்து அவரது மனைவி சங்கீதா எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும், கட்சி சார்ந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இதனால், விஜய் – சங்கீதா பிரிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், பிரித்தானியாவில் இருந்த சங்கீதா அண்மையில் தனது மகனுடன் சென்னைக்கு வந்திருந்தார். இந்நிலையில், வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தவெக சார்பில் நடைபெறும் மாநாட்டில் சங்கீதா கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் செய்தி, விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதாவின் வருகை, கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், திருச்சியில் நடைபெறும் மாநாடு, அரசியல் அரங்கில் ஒரு முக்கியமான நிகழ்வாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

சங்கீதாவின் வருகை, விஜய் அரசியலுக்கு முழுமையாக வந்தது போல், அவரது குடும்பமும் கட்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தும்.