இளம் வயதிலேயே எடை கூடும் குழந்தைகள்! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு!

இளம் வயதிலேயே எடை கூடும் குழந்தைகள்! அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு!

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக, எடை குறைவான குழந்தைகளை விட அதிக உடல் எடை (obese) கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் எடை குறித்த தரவுகளை ஆய்வு செய்துள்ளது. இதன் முடிவுகள், உலகம் முழுவதிலும் உள்ள பெற்றோர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வின்படி, ஆரோக்கியமற்ற துரித உணவுகள் (junk food) மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றின் அதிகப்படியான நுகர்வு காரணமாக குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நிலை, வருங்காலத்தில் குழந்தைகளுக்கு நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சரியான உடற்பயிற்சி போன்றவற்றை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.