ட்ரம்ப் அதிரடி உத்தரவு: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டாம்: நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு!

ட்ரம்ப் அதிரடி உத்தரவு: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டாம்: நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது நேட்டோ நாடுகளையும், சீனாவையும் கடுமையாக எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் போர் நீண்டகாலம் நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாடிக்கையாளரான சீனா மீது 100% வரை வரிகளை விதிக்க வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வார்னிங்!

நேட்டோ நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்வது அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய ட்ரம்ப், இது ரஷ்யாவுக்கு எதிரான பேச்சுவார்த்தை பலத்தை பலவீனப்படுத்துவதாகத் தெரிவித்தார். “நீங்கள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும். இல்லையென்றால், நீங்கள் எனது நேரத்தையும், அமெரிக்காவின் நேரத்தையும் வீணாக்குகிறீர்கள்,” என்றும் அவர் எச்சரித்தார்.

சீனாவுக்கு நூறு சதவீத வரி மிரட்டல்!

ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு பெரும் ஆதரவாக இருக்கும் சீனா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சீனா மீது 50% முதல் 100% வரை வரிகளை விதிக்க வேண்டும் என்றும், இது ரஷ்யா மீதுள்ள சீனாவின் பிடியை உடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கைகள், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய உத்திகளாகப் பார்க்கப்படுகின்றன. இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.