லண்டன் கலவரம்: 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி – எலான் மஸ்க், டாமி ராபின்சன் பேச்சு! காவலர்கள் மீது பயங்கர தாக்குதல்!
லண்டன்: பிரிட்டன் வரலாற்றில் மிக பிரம்மாண்டமான போராட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள “யுனைட் தி கிங்டம்” (Unite the Kingdom) பேரணியில், காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இந்த பேரணியில், 1.10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, பிரபல சமூக ஆர்வலர் டாமி ராபின்சன் மற்றும் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஆகியோர் உரையாற்றினர்.
காவலர்கள் மீது தாக்குதல்!
மெட்ரோபாலிடன் காவல் துறையின் தகவல்படி, போராட்டத்தின்போது சிலர் காவலர்கள் மீது கற்கள், பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
எலான் மஸ்க்-கின் அதிரடிப் பேச்சு:
வீடியோ அழைப்பு மூலம் பேரணியில் உரையாற்றிய எலான் மஸ்க், “பிரிட்டனில் அரசு மாற வேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரிட்டனின் அழிவுக்குக் காரணம் கட்டுப்பாடற்ற குடியேற்றம்தான். நீங்கள் (போராட்டக்காரர்கள்) போராட வேண்டும் அல்லது சாக வேண்டும்,” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
டாமி ராபின்சன்: “பிரிட்டன் விழித்துவிட்டது!”
“பிரிட்டனின் மௌனமான பெரும்பான்மை இனி மௌனமாக இருக்காது. இன்று ஒரு கலாச்சாரப் புரட்சியின் தொடக்கம்,” என்று டாமி ராபின்சன் பேரணியில் முழங்கினார்.
இந்த பேரணி, பிரிட்டனில் தீவிர வலதுசாரி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. போராட்டத்தின் பின்னணி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.