‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீடு எப்போது? ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

‘ஜெயிலர் 2’ படத்தின் வெளியீடு எப்போது?  ரஜினிகாந்த் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கோடிகளை அள்ளிக் குவித்த ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை, அதன் நாயகன் ரஜினிகாந்தே நேரடியாகத் தெரிவித்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். புதிய படப்பிடிப்புக்காக கேரளா புறப்பட்ட சூப்பர் ஸ்டார், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், ‘ஜெயிலர் 2’ குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “படப்பிடிப்பு ஆறு நாட்களுக்கு நடக்கும். படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும். எனவே, ‘ஜெயிலர் 2’ ஜூன் 2026-க்கு பிறகுதான் வெளியாகும்!” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் ‘ஜெயிலர் 2’, முதல் பாகத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது மேலும் அதிகரித்துள்ளது!”