டிரம்ப் கால் வைத்ததும் ஐ.நா. எஸ்கலேட்டர் பழுதானதா? சதி வேலையா?

டிரம்ப் கால் வைத்ததும் ஐ.நா. எஸ்கலேட்டர் பழுதானதா? சதி வேலையா?

ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! அமெரிக்க அதிபர் டிரம்ப் மாற்றுத்திறனாளிகளுக்கான எஸ்கலேட்டரை பயன்படுத்தியபோது அது திடீரென பழுதடைந்தது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது வெறும் விபத்தா? அல்லது அதிபருக்கு எதிரான சதிவேலையா? எனப் பலரும் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபை இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது ஒரு சதி வேலை அல்ல என்றும், அதிபரின் பாதுகாப்புக் குழுவில் இருந்த ஒருவரால் எஸ்கலேட்டரின் பாதுகாப்பு அமைப்பு தற்செயலாகத் தூண்டப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் இந்த நிகழ்வை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, “ஐ.நா.வில் இருந்து எனக்கு கிடைத்தவை ஒரு மோசமான எஸ்கலேட்டர் மற்றும் ஒரு மோசமான டெலிபிராம்ப்டர்” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.