இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், நிரந்தரமான கடன் நிலைத்தன்மையை உறுதிசெய்ய பரந்த அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.
கடன் மறுசீரமைப்பினால் கிடைத்த பலன்களைத் தக்கவைப்பதற்கும், நீண்ட கால கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும், மறுசீரமைப்புடன் சேர்த்து நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் சீரான மற்றும் ஆழமான மாற்றங்கள் தேவை.
நாட்டின் வருவாயை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது போன்ற கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவது மிக அவசியம்.
கடினமான சீர்திருத்தங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, இலங்கையின் பொருளாதார மீட்சி நீடித்து, எதிர்கால நெருக்கடிகள் தவிர்க்கப்படும் என்று IMF சுட்டிக்காட்டியுள்ளது.