அரவிந்த் சாமியை மிஞ்சும் அழகு! கோலிவுட்டின் அடுத்த சாக்லேட் பாய் ரெடி!

அரவிந்த் சாமியை மிஞ்சும் அழகு! கோலிவுட்டின் அடுத்த சாக்லேட் பாய் ரெடி!

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து, தமிழ் சினிமாவின் அத்தனை இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகத் திகழ்ந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. இன்றுவரையிலும் அதே வசீகரத்தைத் தக்கவைத்துள்ள இவர், தனது குடும்பத்தை சினிமா வெளிச்சத்தில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், அரவிந்த் சாமியின் மகன் குறித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர், தன் அப்பாவைக் காட்டிலும் செம ஸ்மார்ட்டாகவும் அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘அடுத்து கோலிவுட்டின் புதிய ஹீரோ இவர்தான்’ என்றும் இணையத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.

அரவிந்த் சாமி ஒரு கோடீஸ்வரரின் மகனாக இருந்தாலும், பாக்கெட் செலவுக்காகத் தன் தந்தையை மட்டுமே நம்பி இருக்கவில்லை. கல்லூரி நாட்களில் மாடலிங் செய்து, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டே நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், இயக்குநர் மணிரத்னம் தனது ‘தளபதி’ படத்திற்காக வட இந்தியாவில் இருந்து வரும் கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு காபி விளம்பரத்தில் அரவிந்த் சாமியைப் பார்த்த மணிரத்னம், உடனே அவரை அழைத்து, ரஜினிகாந்தின் தம்பியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்தப் படம்தான் அரவிந்த் சாமியின் சினிமா வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு, ‘ரோஜா’, ‘பம்பாய்’ போன்ற பல பிரமாண்டமான ஹிட் படங்களில் நடித்து அவர் உச்சம் தொட்டார்.