கரூரில் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று, திமுக முன்னரே திட்டம் போட்டு இருந்தது. நெரிசலில் ஒரு 2 பேர் அல்லது 3 பேர் மரணிக்க கூடும் அதனை வைத்து அரசியல் செய்து விடலாம் என்று, செந்தில் பாலாஜியை வைத்து பக்கா திட்டம் தீட்டியிருந்தது திமுக என்பது எப்பொழுதோ வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஆனால் திமுக எதனை எதிர்பார்கவில்லை என்றால், இந்த 41 மரணங்களை தான். இதனால் தேசிய அளவில் மட்டும் அல்ல சர்வதேச அரங்கில் கூட விஜய் தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க பத்திரிகை, பிரான்ஸ் தொலைக்காட்சி, BBC லண்டன் சேவை, அவுஸ்திரேலிய வானொலி, என்று பல உலக நாடுகளில் இந்த கரூர் விடையம் பேசு பொருளாக அமைந்து விட்டது. இந்த நிலையில், திமுக பிரமுகர்கள் கரூருக்கு வராமல் விட்டிருந்தால், அவர்கள் மீது சந்தேகம் வந்திருக்காது. ஆனால் சொல்லி வைத்தால் போல திமுக பிரமுகர்கள் கரூர் வர. அனைத்தும் தலை கீழாக மாறிவிட்டது.மக்கள் திமுகவின் திட்டம் தான் இது என்று முழுமையாக நம்பி விட்டார்கள்.
இந்த நிலையில் விஜய்க்கு இதுவரை இருந்த ஆதரவை விட தற்போது தமிழகத்தில் ஆதரவும் சுமார் 18% தொடக்கம் 22% விகிதம் கூடியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வெட்ட வெட்ட தளைக்கும் வாழை போல விஜய் அவர்கள் மேலும் மேலும் வளர, திமுக என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் ஓவரா பில்டப் கொடுக்கப் போய் திமுக அமைச்சர், அழுத காட்சியை சரமாரியாக ட்ரொல் பண்ணியுள்ள இளைஞர்கள் குறித்த அமைச்சரை உண்டு இல்லை என்று பண்ணி நாறடித்து விட்டார்கள்.
இந்த நிலை புரியாமல், மக்களை நாடி பிடித்து பார்கத் தெரியாத திமுகாவினர், மேலும் ஒரு பெரும் பிழையை விட்டு விட்டார்கள். அது என்னவென்றால் விஜயை கைது செய் என போஸ்டர்களை அச்சடித்து, மாணவர் அமைப்பு என்ற பெயரில் ஒட்டியுள்ளார்கள். இந்த போஸ்டர்களை சாதாரண பொது மக்களே கிழித்து எறிய ஆரம்பித்ததால், ஒட்டப்பட்ட சில மணி நேரங்களில் எல்லாம், அந்தப் போஸ்டர் பொது மக்களால் அகற்றப்பட்டுள்ளது. எந்த ஒரு TVK தொண்டர்களும் கிழிக்கவே இல்லை. பொதுமக்களே கிழித்து எறிந்து விட்டார்கள்.
இதனால் TVK தலைவர் விஜய் அவர்களுக்கு கரூரில் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று பார்க முடிகிறது.41 பேரைக் கொன்றது செந்தில் பாலாஜி தான் என்று மக்கள் தற்போது திட்டவட்டமாக நம்புகிறார்கள். இதற்கு தான் பல அறிவாளிகள் படித்து படித்துச் சொன்னார்கள். விஜயை சீண்டவேண்டாம், நீங்கள் விதிக்கும் தடைகள் அவருக்கு படிக்கல்லாக அமையும் , ஆனால் யாரும் கேட்டபாடாக இல்லை. திமுகாவே தற்போது விஜயை தூக்கி மேலே நிறுத்தியுள்ளது.
இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை. சர்கார் படம் போல 234 தொகுதிகளையும் TVK கைப்பற்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக பிரமுகர்கள் பலர் டெபாசிட் இழக்க நேரிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.