தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து மூத்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக்கொள்ளாத விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி, அவரை “நாடகக் காதல் தலைவன்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிரடி விமர்சனத்தின் சாரம்சம்:
- வீட்டிற்குள் நாடகம்! – “பொது மேடைகளில் பாசத்தையும், மக்கள் சேவையையும் பேசுபவர் விஜய். ஆனால், அவரது நிஜ வாழ்க்கை இதற்கு நேர்மாறாக உள்ளது. தனது பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரைத் தன்னுடைய வீட்டில் அவர் சேர்த்துக்கொள்வது இல்லை. அவர்கள் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.”
- அதுதான் குணம்! – “வெளியில் ஆயிரம் பேசினாலும், பெற்றோரை அரவணைத்து வாழத் தெரியாததுதான் அவனது குணம். பெற்றோரையே பிரியமாக நடத்தத் தெரியாத ஒருவன், எப்படி மாநிலத்தையே ஆள முடியும்? இதுதான் அவரது உண்மை முகம்!” என்று நெப்போலியன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
- நாடகக் காதல்! – “இது மக்களை ஏமாற்றும் வெறும் நாடகம். தனது வீட்டில் நிகழ்த்தும் நாடகக் காதலைத்தான் அவர் இப்போது அரசியலில் நிகழ்த்தத் தொடங்கி இருக்கிறார். நாட்டுப் பற்று, மக்கள் சேவை என்பதெல்லாம் சினிமா வசனம் போலப் போலியானது!”
அரசியல் களத்தில் கால் பதித்துள்ள விஜய்யை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மூலம் நெப்போலியன் விமர்சித்துள்ளது, திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் கிளப்பியுள்ளது!