விசா இல்லாத பெண்ணை வேலைக்கு போட்டு சம்பளத்திற்கு பதிலாக சாப்பாடு போட்ட “”குமார்””

விசா இல்லாத பெண்ணை வேலைக்கு போட்டு சம்பளத்திற்கு பதிலாக சாப்பாடு போட்ட “”குமார்””

லண்டன் Greenfordல் உள்ள JK OFF LICENCE,  கடை உரிமையாளரின் சித்து விளையாட்டுகள் அம்பலம் ஆகியுள்ளது. இமிகிரேஷன் அதிகாரிகள் 2வது தடவையாக இந்தக் கடைக்குச் சென்றவேளை, விசா இல்லாத பெண் ஒருவரை வைத்து கடை உரிமையாளர் வேலை வாங்குவதை கண்டு பிடித்துள்ளார்கள். முதல் தடவையும் இப்படி சிக்கிக் கொண்டார் கடை உரிமையாளர் குமார்.

குறித்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள் விசாரித்தவேளை, அந்தப் பெண் தான்.. 45 தொடக்கம் 50 மணி நேரம் (வாரம் தோறும்)  வேலை செய்வேன் என்றும். தனக்கு கடை உரிமையாளர் £9 பவுண்டுகள் படி சம்பளம் தருவதாக கூறி இருந்தார்.

இதேவேளை கடை உரிமையாளரை கேட்ட வேளை, அவர் இதனை மறுத்துள்ளதோடு. தனக்கு சாப்பாடு மட்டும் தந்தால் போது, நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக அந்தப் பெண் கூறியதால், அவருக்கு உணவுகளை மட்டும் வழங்கி வந்தேன் என்று கூறியுள்ளார். இதனால் கவுன்சிலர் தொடக்கம் , அதிகாரிகள் வரை குழம்பிப் போய் உள்ளார்கள். எந்த சொலிசிட்டரிடம் இவர் , உதவி கேட்டார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததை குமார் அப்படியே ஒப்பித்துள்ளார் என்பது மட்டும் புரிகிறது.

இதேவேளை குறித்த பெண் தன்னிடம் அன்றைய தினம் தான் வந்து, வேலை கேட்டதாகவும். தான் உங்கள் அனுமதிப் பத்திரங்களை தாருங்கள் என்று கேட்டதாகவும் அவர் கொண்டு வந்து தர இருந்த நிலையில் தான் திடீரென அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு எதுவுமே தெரியாது என்று கடை உரிமையாளர் குமார் கூறியுள்ளதாக ஹரோ டைம்ஸ் நேற்று(16) செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் பலர் தமது கடைகளில், விசா இல்லாத நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். இதுவும் ஒரு வகையில் உதவி தான். ஆனால் பிரிட்டன் சட்டப்படி இது மாபெரும் குற்றம் ஆகும். பொதுவாக லண்டனில் மில்லியன் கணக்கில் கடைகள் உள்ளதால், அத்தனை கடைகளுக்கும் அதிகாரிகள் செல்ல முடியாது. பொதுவாக யாராவது துப்பு கொடுத்தால் மட்டுமே செல்வார்கள் என்பதனையும் கருத்தில் கொள்வது நல்லது.

Loading