லண்டனை தாக்கும் ஈரானின் சதித்திட்டங்கள் அம்பலம் – MI5 பகீர் எச்சரிக்கை

லண்டனை தாக்கும் ஈரானின் சதித்திட்டங்கள் அம்பலம் – MI5 பகீர் எச்சரிக்கை

லண்டன்:

பிரிட்டனுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ‘ஒரு புதிய சகாப்தத்தை’ நோக்கி நகர்ந்து வருவதாகவும், பயங்கரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் சதித்திட்டங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் பிரிட்டனின் உள்நாட்டு உளவு அமைப்பான (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ், செக்‌ஷன் 5) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, லண்டனில் வசிக்கும் ஈரானிய ஆட்சிக்கு எதிரான எதிரிகளைக் கடத்தவோ அல்லது கொல்லவோ ஈரான் தீட்டிய பல சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்ட பின்னணியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

முறியடிக்கப்பட்ட 15 ஈரானிய சதித்திட்டங்கள்:

பிரிட்டன் காவல்துறை மற்றும் கூட்டாக இணைந்து, 2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும், ஈரானால் மேற்கொள்ளப்பட்ட 15 சதித்திட்டங்களை முறியடித்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவலை தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஈரானிய ஆட்சியின் “எதிரிகள்” என்று கருதப்படும் பிரிட்டனைச் சேர்ந்த அல்லது பிரிட்டனில் வசிக்கும் நபர்களைக் கடத்துவது மற்றும் கொல்வது ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.

ஈரானிய செய்திச் சேனல் வெளியேற்றம்:

ஈரானின் அச்சுறுத்தலுக்கு அஞ்சிய ஒரு சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தது:

  • லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ‘ஈரான் இண்டர்நேஷனல் டி.வி.’ (Iran International TV) என்ற செய்திச் சேனல், ஈரானின் “தீவிரமான மற்றும் கடுமையான” அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது லண்டன் தலைமையகத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக, அந்தச் சேனல் தனது செயல்பாடுகளை அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-க்கு மாற்றியுள்ளது.
  • சேனலின் பொது மேலாளர், “ஒரு வெளிநாட்டு அரசு பிரிட்டிஷ் மண்ணில், பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இங்கிலாந்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திர பேச்சுரிமை போன்ற விழுமியங்கள் மீதான தாக்குதல்,” என்று வேதனை தெரிவித்தார்.

அச்சுறுத்தல்கள் 4 மடங்கு அதிகரிப்பு:

 

“வெளிநாட்டு அரசுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பான எங்களின் ஒட்டுமொத்த பணிச்சுமை கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது” என்று தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் மாட் ஜுக்ஸ் (Matt Jukes) தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசாங்கம், “ஊடகச் சுதந்திரத்துக்கு எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், ஈரானிய அரசின் இந்த நடவடிக்கை முற்றிலும் ஏற்க முடியாதது,” என்றும் கூறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக, உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பகைமை நாடுகளின் உளவு மற்றும் சதித்திட்டங்கள் ஆகிய இரட்டைக் கத்திகளை பிரிட்டன் எதிர்கொள்ளும் ஒரு புதிய அத்தியாயம் உருவாகி வருவதாக எச்சரித்துள்ளது.

Loading