நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது! இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் 8 மீற்றர் நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து ஒரு விவசாயியின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மிகவும் நீளமான மலைப்பாம்பு ஒன்று பெரும் சிரமத்துடன் போராடிக் கொண்டிருந்ததை உள்ளூர் மக்கள் அவதானித்துள்ளனர். ஏதோ அசாதாரணமானது நடந்திருக்க வேண்டும் என்று சந்தேகித்த அவர்கள், மலைப்பாம்பை நெருங்கிச் சென்று பார்த்தபோது, அது ஒரு மனிதனை முழுவதுமாக விழுங்கியிருப்பதை அறிந்து அதிர்ந்து போயினர்.
உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள், அந்த ராட்சத மலைப்பாம்பைக் கொன்று, அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்துள்ளனர். உள்ளே, 63 வயதுடைய ஒரு விவசாயியின் உடலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் சர்வதேச ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மனிதனை ஒரு மலைப்பாம்பு விழுங்கியது அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.