Posted in

யாழில் போதைக்கு அடிமையான காதலி: தீ வைத்து உயிர்மாய்ப்பு !

யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், ஒரு காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்த ஈழத் தமிழர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. யாழ்ப்பாணம் இன்று தெற்காசியாவின் போதைப் பொருள் மையமாக மாறியுள்ள நிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

யாழ்ப்பாணத்தின் ஐயனார் கோவிலடி, நாவற்குழியைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள ஓர் இளைஞரைக் காதலித்து வந்தார். ஆனால், காலப்போக்கில் அந்தக் காதலன் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாகக் காதலன் கொண்டு வந்த போதைப் பொருட்களைக் குறித்த பெண்ணும் பயன்படுத்தப் பழகிக் கொண்டதோடு, அது அவரது கட்டுப்பாட்டையும் மீறிச் செல்ல ஆரம்பித்துள்ளது. ஒரு கட்டத்தில் போதைப் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் அந்தப் பெண் திண்டாடியுள்ளார். இதனைக் காரணம் காட்டி காதலன் கம்பி நீட்டியுள்ளார். இதனால் அந்தப் பெண் மனமுடைந்துள்ளார்.

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்குத் தானே தீ வைத்துத் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட காதலன் உடனடியாகத் தீயை அணைத்து, தனது காதலியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் என எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஏன் போதைப் பொருட்களின் குப்பைக் கிடங்கானது?

கேரளாவில் இருந்து வரும் கஞ்சா முதல், கர்நாடகாவில் இருந்து வரும் உயர்தரப் போதைப் பொருட்களான ஓப்பியம், ஹெரோயின், ஐஸ் மற்றும் ‘பஃபர்ஸ்’ (Poppers) என்று அழைக்கப்படும் அனைத்து வகையான போதைப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் குறைந்த விலையில் மலிவாகக் கிடைக்கிறது என்பது பெரும் ஆச்சரியம்.

‘ஏன் யாழ்ப்பாணம்?’ என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இது 2009ஆம் ஆண்டுப் போருக்குப் பின்னர் ராஜபக்சேக்களால் (Rajapakshas) திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விபரீதமான திட்டம். இலங்கை இராணுவத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்குப் போதைப் பொருட்களை வரவழைத்து, பின்னர் அதனை கொழும்பு ஊடாகப் பிற நாடுகளுக்குக் கப்பல் மூலம் கடத்துவது ஒரு பெரிய வியாபாரம்.

இந்த வியாபாரத்தைப் பாதுகாப்பதற்காகவே, யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கும் போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், இனி நாட்டில் எந்த ஒரு போராட்டமும் தொடங்காது, புலிகளும் மீண்டும் தோன்ற மாட்டார்கள் என்பது ராஜபக்சேக்களின் கணக்கு.

ஆனால், இவர்களின் இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட திட்டம் அவர்களால் கூடச் சமாளிக்க முடியாத அளவு உச்சத்தைத் தொட்டுவிட்டது. அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் கூட, இன்றுவரை இந்த பாதாள உலகக் கோஷ்டிகளைக் (Underworld Gangs) கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை.

இதற்குக் காரணம், இந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் இந்தியத் தாதாக்கள், இராணுவம், காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சத்தை அள்ளி வழங்குவதுதான். இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் அவல நிலை.

Loading