நேற்றைய தினம்(09) ஒரு பெரும் போர் வெடிக்கும் அபாயத்தில் இருந்து தப்பியுள்ளது இந்த உலகம் என்று தான் கூறவேண்டும். உக்ரைனில் குண்டைப் போட்ட ரஷ்ய விமானங்கள், போலந்து எல்லை நோக்கிச் சென்றதால், அலேட் ஆனா நேட்டோ படையணி. குறித்த ரஷ்ய விமானங்களை விரட்ட, சில நொடிகளில் தனது விமானப் படையை ஏவியது. விண்ணில் சீறிப் பாய்ந்த நேட்டோ நாடுகளின் விமானப்படை, போலந்து எல்லை நோக்கிச் செல்ல.
ரஷ்ய போர் விமானங்கள் உடனே அங்கே இருந்து நகர்ந்து பெலருஸ் நாடு பக்கமாகச் சென்று விட்டது. போலந்து நாட்டு எல்லையில் ரஷ்ய விமானம் வந்து. அதனை நேட்டோ விமானங்கள் எதிர்கொண்டு இருந்தால், பெரும் அழிவையே உலகம் இன்று பார்த்திருக்கும். இந்தச் சம்பவம் 3ம் உலகப் போரை முடிக்கி விட்டிருக்கும். ஆனால் எதற்கும் நாம் தயார் என்ற நிலையில் தான் நேட்டோ படையணி உள்ளது. மேலும் சொல்லப் போனால்…
அமெரிக்காவின் உதவி இன்றி இயங்கக் கூடிய வகையில் நேட்டோ படையணி தயாராகி வருகிறது. இது இவ்வாறு இருக்க மருத்துவப் பொருட்கள், உணவுகள் தானியங்கள் என்று பல அத்திய அவசிய பொருட்களை நேட்டோ நாடுகள் பதுக்கி வைக்க ஆரம்பித்துள்ளது. இன்னும் 4 வருடங்களில் போர் ஒன்று வரும் என்பதனால் இந்த ஆயத்தங்களை நேட்டோ நாடுகள் மேற்கொண்டு வருகிறது. இது இவ்வாறு இருக்க….
ரஷ்யா சுமார் 5,000 கண்டேனர்களை வாங்கி, அணு குண்டு பாதுகாப்பு வீடுகளாக மாற்றி வருகிறது. அணு குண்டு வெடித்தாலும் தாக்குப் பிடிக்க கூடிய சிறிய வீடுகளாக கண்டேனர்களை மாற்றி வருகிறது. இந்த நடவடிக்கை நேட்டோ நாடுகளை அலேட் ஆக்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.