பிக்பாஸ் சீசன் 9-ல் உச்சகட்ட பரபரப்பு! 70 நாட்களைக் கடந்தும் உருப்படியாக ஒரு டாஸ்க்கைக் கூட விளையாடத் தெரியாமல் முழிக்கும் போட்டியாளர்கள் ஒருபுறம்… “எப்போடா இந்த சீசன் முடியும்?” என்று தலையிலடித்துக் கொள்ளும் ரசிகர்கள் மறுபுறம்! இடையில் இப்போது விஜய் சேதுபதியையே விமர்சித்து கானா வினோத் பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி இணையத்தையே அதிரவைத்துள்ளது!
“சம்பளம் வேஸ்ட்!” – வினோத் விளாசினாரா?
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பற்றி போட்டியாளர் கானா வினோத் தரக்குறைவாகப் பேசியதாக ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இவரை எதுக்கு ஹோஸ்ட்டா கூப்பிட்டாங்க? இவருக்குத் தரும் சம்பளம் வேஸ்ட்” என்கிற ரீதியில் வினோத் பேசிய வீடியோ க்ளிப்கள் வைரலாகி, விஜய் சேதுபதி ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது!
பி.ஆர் (PR) டீம் தான் காப்பாத்துதா?
வீட்டிற்குள் இருக்கும் பார்வதி மற்றும் கம்ருதீன் செய்யும் அலும்பல்களுக்கு அளவே இல்லை. ஆனாலும் அவர்கள் இன்னும் வெளியேறாமல் இருப்பதற்குப் பின்னால் பலமான PR டீம் வேலை செய்வதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர். “தகுதியே இல்லாத இவங்க எப்படி இன்னும் உள்ள இருக்காங்க?” என சமூக வலைதளங்களில் கேள்விகள் அனல் பறக்கின்றன.
ஏமாற்றிய ‘மக்கள் செல்வன்’.. கடுப்பான ரசிகர்கள்!
நேற்றைய எபிசோடில் பார்வதி, கம்ருதீன் மற்றும் சாண்ட்ராவை விஜய் சேதுபதி பிரித்து மேய்வார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே!
-
சாண்ட்ராவை சும்மா பட்டும் படாமலும் கண்டித்த விஜய் சேதுபதி,
-
பார்வதி – கம்ருதீன் ஜோடியை பெரிதாகக் கேள்வி கேட்காமல் விட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“கேள்வி கேட்க பயமா? இல்ல இதுவும் ஸ்க்ரிப்ட்டா?” என மக்கள் கொந்தளித்து வரும் நிலையில், இந்த சீசன் வின்னர் யார் என்பதில் பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது!
இந்த சீசனில் விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் முறை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அல்லது கானா வினோத் சொல்வது போல மாற்றப்பட வேண்டுமா? உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!