ஈழத் தமிழர்களா? அவர்களை நான் துண்டாக மறந்து விட்டேன். கடந்த பல வருடங்களாக நான் ஈழத் தமிழர்களுக்காக என்னையே வருத்தி தியாகம் செய்து இருக்கிறேன். என்னை ஜெயலலிதா அவர்கள் ‘பொடா’ (POTA) சட்டத்தில் போட்டு 3 வருடங்கள் சிறைக்குத் தள்ளினார். அங்கே கஷ்டங்களைத் தான் அனுபவித்தேன். ஆனால் நேற்று வந்த சீமான் பின்னால் ஈழத் தமிழர்கள் சென்றார்கள். என்னை மறந்தார்கள். அதனால் நானும் அவர்களை மறந்து விட்டேன் என்று வைகோ தனது நெருங்கிய நண்பர் ஒருவருடன் பேசும் போது மிகவும் மன வருத்தத்தோடு பேசியுள்ளார்.
ஈழத் தமிழர்கள் கண்மூடித்தனமாக, சீமானை ஆதரித்த அந்தத் துணிச்சலில் தான் சீமான் என்னைப் பற்றி அவதூறு பேசினார். வயது வித்தியாசம் கூட பாராமல் என்னைச் சாடினார். ஏதோ ஈழத் தமிழர்களை மொத்தமாக குத்தகைக்குத் தாமே எடுத்துக் கொண்டது போல சீமான் நினைக்க ஆரம்பித்தார். எங்கே ஈழத் தமிழர்களைப் பற்றி நான் பேசி, தனது செல்வாக்கைக் குறைத்து விடுவேனோ என சீமான் எண்ணியதால் என்னை தரம் குறைவாகப் பேசினார். அப்போது கூட எந்த ஒரு ஈழத் தமிழரும் வாயே திறக்கவில்லை என்று வைகோ அவர்கள் கூறியுள்ளார்.
நான் புலிகளை ஆதரித்துப் பேசியதால், என்னை பொடா சட்டத்தில் 3 வருடம் சிறையில் அடைத்தார்கள். ஆனால் ஒரு நாள் கூடச் சிறை செல்லாத சீமானை எப்படி ஈழத் தமிழர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டு, மரியாதை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் வைகோ. புலிகள் காலத்தில் தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல் நகர்வாக இருந்தாலும் வைகோ ஊடாகவே காய் நகர்த்தப்பட்டது.
ஆனால் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கச் சென்ற சீமான், தலைவரோடு நின்றது போல ஒரு படத்தை எடுத்து வெளியிட்டு, கட்சி ஒன்றைத் தொடங்கி இன்று பேரம் பேசிப் பேசி, கோடி கணக்கில் பணத்தைப் புரட்டியுள்ளார். அவர் வைத்திருக்கும் கார்கள், பங்களாக்கள் எண்ணில் அடங்காதவை. ஆனால் இன்றும் மிகவும் எளிமையாக வாழ்ந்து அரசியல் செய்து வருபவர் வைகோ. தன்னுடைய மனது புண்பட்ட விதத்தை தனது நெருங்கிய நண்பருடன் அவர் பகிர்ந்துள்ளார்.