Posted in

அகதி முகாமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஈழத் தமிழ் இளைஞர் !

Jaffna ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் Germany சென்று அங்கு Refugee  என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தாங்கவைத்தனர். விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி இருந்தார்.

அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி வந்ததாக அறியப்படுகிறது, குடும்பத்தினரும் “போன காசை உழைத்துக்கொண்டு வா” என்று ஆறுதல் கூறியும் இளைஞர் மனவிரக்ததிக்கு சென்று நேற்று செவ்வாய் அதிகாலை 2:30 மணிக்கு முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.  சடலம் உடற்கூற்று சோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரனைகளை அவ் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும் பணத்தை செலவு செய்து, நகைகள், வீடுகளை அடகு வைத்து வெளிநாட்டுக்கு வரும் இளைஞர்களுக்கு தற்போது கிடைப்பது எல்லாமே மன விரக்த்தி தான். சுகன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய , நாமும் பிரார்த்திப்போம். ஓம் ஷாந்தி ….

நன்றி
லண்டன் தமிழ் பையன் (Facebook Page)