வீடியோ கீழே இணைப்பு
பிரிட்டனில ஒரு சாதாரண நாள், ஆனா நம்ம போலீஸ்காரர்களுக்கு மட்டும் அது ‘பகீர்’ நாளா மாறிடுச்சு. கார் விபத்தை விசாரிக்கப் போன போலீஸ்காரரை பார்த்து, 32 வயசு ஆல்பேனிய ஆசாமி ஒருத்தன் ‘திடுதிடு’ன்னு ஓடிப் போய் காரிலிருந்து ஒரு எலக்ட்ரிக் மெஷின் ரம்பத்தை(வாள்) (Chainsaw) எடுத்துட்டு வந்துட்டான். முதல்ல போலீஸ் காரை எடுத்து ஓட்டி அங்கிருந்து தப்ப முயற்சி செஞ்சாங்க. ஆனால் நடுக்கத்தில் கார் ஆக்சிடென்ட் ஆகவே, கார் கதவைத் திறந்து ஓட ஆரம்பிச்சிருக்காங்க.
அதுவும் சும்மா இல்ல, அந்த மெஷினை ‘கர்ர்ர்ர்’னு ஸ்டார்ட் பண்ணிட்டு போலீஸ்காரரை வெட்டப் பாய்ஞ்சிருக்கான். இதைப் பார்த்த நம்ம பிசி (PC) கோவன், “அய்யோ சாமி.. இன்னைக்கு நம்ம கை, கால் எல்லாம் துண்டு துண்டா போயிரும் போலயே”ன்னு நினச்சு, ஒலிம்பிக் வீரர் ரேஞ்சுக்கு தெருவுல ஓட்டம் பிடிச்சிருக்காரு!
அந்த ஆளு மெஷினை சுத்திட்டு துரத்துறதைப் பார்த்து மக்கள் எல்லாம் “என்னடா இது ஹாரர் படத்துல வர்ற சீன் மாதிரி இருக்கு!”ன்னு மிரண்டு போயிருக்காங்க. “என்னை மீடியா எடுங்கடா, கேமராவைக் கொண்டு வாங்கடா!”ன்னு அந்த சைக்கோ நடுரோட்டுல கத்திக்கிட்டே ஓடியிருக்கான். ஒரு வழியா போலீஸ்காரர் தப்பிச்சு, அந்த ஆளு மெஷினை கீழ வச்ச கேப்புல ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடிச்சு அவனை அமுக்கிட்டாங்க. பாவம், நம்ம போலீஸ்காரருக்கு பயத்துல முட்டி வலியே வந்து, நாலு மாசம் லீவ்ல போயிட்டாராம்.
இந்த கேஸ் இன்னைக்கு கிளாஸ்கோ கோர்ட்டுக்கு வந்தது. ஜட்ஜ் எல்லாத்தையும் கேட்டுட்டு, “யோவ்.. நீ பண்ண வேலைக்கு 10 வருஷம் ஜெயில் தான் கரெக்ட்”ன்னு தீர்ப்பைச் சொன்னாரு. அதைக் கேட்டதும் அந்த ஆளு கம்முனு இருப்பானா? நீதிபதியைப் பார்த்து “நீ ஒரு டெரரிஸ்ட்.. உன் நாடே டெரரிஸ்ட் தான்!”னு ஒரே போடா போட்டுட்டான். கோர்ட்டே ஒரு நிமிஷம் கம்முனு ஆயிடுச்சு. இத்தனை வருஷத்துல இப்படி மெஷின் ரம்பத்தோட ஒருத்தன் துரத்துறதை இப்பதான் பார்க்குறேன்னு ஜட்ஜே ஷாக் ஆகிட்டாரு.
கடைசியில அந்த ஆளோட வக்கீல் வந்து, “அவரு தம்பி கார்ல கார்டன் வேலைக்குத் தான் அந்த மெஷினை வச்சிருந்தாரு. போலீஸைப் பார்த்ததும் பயத்துல மனநிலை சரி இல்லாம இப்படி பண்ணிட்டாரு”ன்னு ஒரு உருட்டை உருட்டிப் பார்த்தாரு. ஆனா ஜட்ஜ் எதையும் நம்பல. “நீ பண்ணது கொலை முயற்சி”ன்னு சொல்லி உள்ள தள்ளிட்டாங்க. லண்டன்ல ஒரு நிமிஷம் ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நடந்த இந்த மெஷின் ரம்ப பஞ்சாயத்து இப்போ சோசியல் மீடியால பயங்கர வைரல்!
