காலை 6.40 க்கே வாக்குச் சாவடி சென்ற தல அஜித் பூத்தில் 3வது ஆளாக நின்று வாக்குப் போட்டார் !

காலை 6.40 க்கே வாக்குச் சாவடி சென்ற தல அஜித் பூத்தில் 3வது ஆளாக நின்று வாக்குப் போட்டார் !

19ம் திகதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல பிரபலங்கள் தமது வாக்குகளைப் போட்டுள்ள நிலையில். ரஷ்யாவில் கோட் படப்பிடிப்பில் இருந்த விஜய், 18ம் திகதி இரவே சென்னை வந்து 19ம் திகதி தனது வாக்கை பதிவுசெய்து விட்டார். அது போக தல அஜித் அவர்களும் தவறாமல் வாக்கு போட்டு வருகிறார். அதனை ஒரு ஜனநாயகக் கடமையாக அவர் நினைத்து வருகிறார் என்பது ஒரு அவரது ரசிகர்களை உச்சாகப்படுத்தும் ஒரு விடையம்.

ஆனால் காலை 7 மணிக்கு தான் வாக்குச் சாவடிகள் திறக்கும் என்றும். 7 மணிக்கே வாக்குகளை செலுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த நிலையில். காலை 6 மணிக்கே புறப்பட்டுச் சென்ற தல அஜித் அவர்கள். சுமார் 6.40க்கு வாக்குச் சாவடி முன்னால் சென்றுவிட்டார். ஆனால் அங்கே அவருக்கு எதிரில் 2 பேர் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். இதனால் 3வது நபராக நின்ற தல அஜித் தனது வாக்கை போட்ட பின்னர் வீடு திரும்பியுள்ளார்.