இதுக்குதான் ஓவரா வாய் பேசக்கூடாது… சிம்புவை ஓங்கி அடித்த பிரபல நடிகர்?

சிம்பு

அப்பா டி ராஜேந்தர் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் குழந்தையாக இருக்கும்போது நடிக்க துவங்கியவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தனது அப்பா இயக்கிய .படங்களில் நடித்து புகழ்பெற்றார் அந்த படங்கள் மிகுந்த வரவேற்பை பெறவே தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த வாய்ப்புகள் கிடைக்க பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அறிமுகமான புதிதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிகளை குவித்து வந்த நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார். நடிகர் சிம்பு முதன் முதலில் உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1984 இல் அறிமுகமானார்.

அதன் பிறகு காதல் அழிவதில்லை படத்தில் சிம்பு ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணன், வல்லவன், காளை , சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜா தான் வருவேன், ஈஸ்வரன், மாநாடு வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு பிரபல நடிகர் ஒருவர் வாய் தகராறில் ஓங்கி அடித்த விஷயம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ஆம் சிம்பு வளர்ந்து வந்த நேரத்தில் நடிகர் அருண்விஜய்யிடம் ஏடாகூடாமாக எதோ பேசியுள்ளார். இது அருண் விஜய்க்கு மிக கோபம் வர ஒரு கட்டத்தில் வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

உடனே அருண் விஜய் சிம்புவை எகிறி அடிக்க அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். ந்த விஷயத்தை பத்திரிகையாளர் அந்தனன் கூறியுள்ளார். செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, அருண் விஜய் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.