தமிழ் சினிமாவின் மிரட்டலான வில்லன் தான் இந்த குட்டி பையன்… யாருன்னு தெரியுதா?

தமிழ் சினிமாவின் மிரட்டலான வில்லன் தான் இந்த குட்டி பையன்… யாருன்னு தெரியுதா?

பிரபல மலையாள நட்சத்திர நடிகர் ஆன பகத் பாஸில் தமிழில் வில்லனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகராக பார்க்கப்பட்ட வருகிறார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் தொடர்ந்து வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த தமிழ் சினிமா ரசிகர்களின் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான நஸ்ரியா நசீமை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபஹத் ஃபாசில் தற்ப்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. தெலுங்கு , தமிழ் சினிமாவில் இப்போது டெர்ரரான வில்லனாக பஹத் பாசிலா இது என ரசிகர்கள் வியந்து இந்த போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்