வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட்டா கண்டீஷன் போட்ட நடிகர் விஜய்!

வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட்டா கண்டீஷன் போட்ட நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்றது வருகிறது. இப்படத்தில் லைலா, சினேகா, மைக் மோகன் , பிரசாந்த் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் அப்பா – மகன் என நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் வேளையில் தற்போது கோட் திரைப்படத்தை குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கோட் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் வரும் காட்சி ஒரு நிமிடத்திற்கு வருகிறதாம். அது பற்றி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்டிருக்கிறாராம். விஜயகாந்த் வரும் காட்சி கொஞ்சம் கூட செயற்கையாக இருக்க கூடாது என விஜய் சொல்லி இருக்கிறாராம். காட்சியில் திருப்தி இல்லை என்றால் அதை படத்தில் இருந்து நீக்கவேண்டி வரும் என்றும் எச்சரித்து இருக்கிறாராம்.