ஆரம்பத்தில் அவமானப்பட்ட விஜய்சேதுபதி – எமோஷ்னல் பேட்டி!

ஆரம்பத்தில் அவமானப்பட்ட விஜய்சேதுபதி – எமோஷ்னல் பேட்டி!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் குணச்சித்திர வேடம் சிறப்பு தோற்றம் என எதுக்கெடுத்தாலும் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து எல்லோரது கவனத்தை ஈர்த்து பெரும் புகழ்பெற்ற நடிகராக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முன்னொரு காலத்தில் இப்படி ஒரு இடத்தை பிடிக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் நடித்திருக்கிறார்.

இந்த சீரியலில் சீதா, ரேவதி, டெல்லி கணேசன் பல நடித்திருந்தார்கள். இந்த சீரியலில் நடிக்கும் போது விஜய் சேதுபதிக்கு நடிப்பே வராதாம். அப்போது அந்த சீரியலில் நடிப்பவர்கள் விஜய் சேதுபதி பயங்கரமாக திட்டுவார்களாம்.

உனக்கு நடிப்பே வரவில்லை. ஏன் நீ எல்லாம் வந்தாய் என கேவலமாக திட்டி இருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் மட்டும் அவனை திட்டாதீர்கள் அவனுக்கு நடிப்பை சொல்லி கொடுங்கள் என கூறுவாராம். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி மிகவும் அவமானப்படுத்தப்பட்டு நமக்கு மட்டும் ஏன் நடிப்பை வரவில்லை மற்றவர்கள் எல்லாருக்கும் வருதே நாமும் மற்றவர்களை போல மனுஷன் தானே எனக்கு மட்டும் ஏன் வரவில்லை என தன்னைத்தானே திட்டிக் கொண்டு பல முறை அழுது இருக்கிறாராம்.

இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தான் இன்று நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.