கமலுக்கு மகளாக மீனா… விஷயத்தை கேட்டு காறித்துப்பும் கோலிவுட்!

கமலுக்கு மகளாக மீனா… விஷயத்தை கேட்டு காறித்துப்பும் கோலிவுட்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகை ஆன மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்த பல்வேறு வெற்றிகளை குவித்திருக்கிறார். பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக அவதாரம் எடுத்து பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பெயர் எடுத்தார். குறிப்பாக ரஜினிகாந்த், கமலஹாசன்.அஜித் என பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார் .

இந்நிலையில் நடிகை மீனா – கமல் குறித்த ஒரு ஷாக்கிங் ஆன விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது மீனா மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி மற்றும் நாயகன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருந்தது.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற படமாக பார்க்கப்பட்டது. ஆனால் நடிகை மீனா கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிப்பதற்கு முன்னரே அவருக்கு மகளாக நடித்திருக்கிறாராம். ஆம், யாத்கார் என்ற இந்தி மொழி படத்தில் கமலுக்கு மகளாக மீனா நடித்திருக்கிறார். அப்படத்தில் குட்டி நட்சத்திரமாக கமலுடன் நடித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

athirvu