எனக்கு பிடிக்கல… கமல் படத்தில் நடிக்க மறுத்த மீனா – காரணம் இதுதான்!

எனக்கு பிடிக்கல… கமல் படத்தில் நடிக்க மறுத்த மீனா – காரணம் இதுதான்!

90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை மீனா தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெயர் எடுத்தார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன் நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்கள் நடித்து முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்துவந்த மீனா பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மீனாவின் கணவர் 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், கமலின் தேவர் மகன் படத்தில் இருந்து விலகியதை குறித்து பேசியுள்ளார். அதாவது, “தேவர் மகன் படத்தில் முதலில் நான் தான் நடிக்கவிருந்தேன். முதல் கட்ட படப்பிடிப்பில் கூட நடித்தேன். ஆனால் கமல் சாருக்கு அவரது கெட்டப் பிடிக்காததால் படப்பிடிப்பு தாமதம் ஆனது.

பின்னர் மீண்டும் சில மாதங்கள் கழித்து ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்தார்கள். ஆனால், அதற்குள் நான் வேறு சில படங்களில் பிஸியாக நடித்து வந்தேன். இதையடுத்து அவர்கள் தேவர் மகன் படத்திற்கு டேட் கேட்கும் போது என்னால் கொடுக்கமுடியவில்லை” இதனால் அப்படத்தில் நடிக்கவில்லை என்று மீனா கூறியுள்ளார்.