“நான் நடித்த மோசமான படம்”… சூர்யாவுடன் நடித்ததை குறித்து நயன்தாரா வேதனை!

“நான் நடித்த மோசமான படம்”… சூர்யாவுடன் நடித்ததை குறித்து நயன்தாரா வேதனை!

தமிழ் சினிமாவில் இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இன்று இந்த அளவுக்கு நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா நான் அந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கவே கூடாது என கூறியுள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆம், சூர்யா நடிப்பில். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் கஜினி இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக மோசமான கவர்ச்சியான கதாபாத்திரமாக இருக்கும்.

இது குறித்து பேசிய நயன்தாரா “கஜினி திரைப்படத்தில் நடித்ததுதான் என்னுடைய வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்று கருதுகிறேன். அந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னிடம் சொல்லப்பட்டபடி காட்டப்படவில்லை. அந்த திரைப்படத்தில் சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இதனை நான் புகாராக சொல்லவில்லை, இந்த விஷயத்தை எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்” என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.