உங்களுக்கு இம்புட்டு தைரியமா? புலிகளை படம்பிடித்த நடிகை சதா – வீடியோ!

உங்களுக்கு இம்புட்டு தைரியமா? புலிகளை படம்பிடித்த நடிகை சதா – வீடியோ!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை சதா. இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் . இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருந்தார்.

இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் . ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு எதிரி , வர்ணஜாலம் , அந்நியன், பிரியசகி , திருப்பதி உன்னாலே உன்னாலே , எலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக அவர் சில படங்களில் வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

இதனால் சினிமாவில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் நடிகை சதா. இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் wildlifephotography போட்டோகிராபி எடுத்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அதில் புலிகளை படம் பிடித்துள்ள நடிகை சதாவின் தைரியத்தை பார்த்து நடிகைக்கு இவ்வளவு திறமையா என அவரை பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள்.