“குஷ்பு இட்லி” பெயர் இப்படித்தான் வந்தது…. சுவாரஸ்ய தகவலை கூறிய குஷ்பு!

“குஷ்பு இட்லி” பெயர் இப்படித்தான் வந்தது…. சுவாரஸ்ய தகவலை கூறிய குஷ்பு!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டவர் தான் நடிகை குஷ்பு. இவர் 80ஸ் காலத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கி அதன் பிறகு 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து கொடிகட்டி பறந்த நடிகையாக தென்பட்டு வந்தார்.

புஷ் புஷ் கன்னங்களைக் கொண்டு அறிமுகமான குஷ்புவுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. குறிப்பாக இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அந்த காலத்திலேயே பிடித்திருந்தார்.

இதனிடையே சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாளர் குஷ்புக்கு தற்போது இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் “குஷ்பு இட்லி” பெயர் எப்படி ஆரம்பித்தது என்ற விஷயத்தை குறித்து கூறியுள்ளார்.

அதில் அவர், தர்மத்தின் தலைவன் படத்தின் போது எல்லோரும் வாடா போடா என பேச நானும் அது நல்ல வார்த்தை என ரஜினியை வாடா என கூப்பிட்டேன். அதைக்கேட்டதும் பிரபு உடனே ரஜினியை அப்படியெல்லாம் கூப்பிட கூடாது, என்ன வார்த்தை என புரிய வைத்தார். அதன்பின் எனது கன்னத்தை கிள்ளி இட்லி போலவே இருக்கிறது என கூற அப்படி தான் குஷ்பு இட்லி உருவானது என கூறியிருக்கிறார்.