மகள்களின் அனுப்பு முத்தத்தில் அர்ஜுன்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

மகள்களின் அனுப்பு முத்தத்தில் அர்ஜுன்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யா – உமாபதி ராமைய்யாவின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகையாக தென்பட்டு வருகிறார். முதன் முதலில் யானை திரைப்படத்தில் நடித்து 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை அடுத்து பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா. பெற்றோர்கள் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

அதையடுத்து ஐஸ்வர்யா – உமாபதியின் திருமணம் அண்மையில் படு கோலாகலமாக நடந்துள்ளது. அவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அர்ஜுனுக்கு அவரது இரண்டு மகள்களும் அன்பு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் அனைவரைத்து கவனத்தையும் ஈர்த்து வருகிறது.