அம்மாவை மிஞ்சும் அழகில் ஐஸ்வர்யா ராய் மகள் – ரீசன்ட் போட்டோஸ்!

அம்மாவை மிஞ்சும் அழகில் ஐஸ்வர்யா ராய் மகள் – ரீசன்ட் போட்டோஸ்!

உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து இங்கும் பிரபலமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆரத்யா பச்சன் என்ற ஒரு மகள் இருக்கிறார். ஆராத்யா சிறு வயதாக இருந்தபோது தனது முடியால் முகத்தை மூடிக்கொண்டு அவ்வப்போது வலம் வந்து கொண்டிருப்பார். இதனால் அவரது அழகை முழுமையாக யாரும் பார்க்கவில்லை .

இந்நிலையில் தற்போது திடீரென டீனேஜ் வயதுக்கு மாறி இருக்கும் ஆரத்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்டு எல்லோரையும் வியக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராயின் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.