குழந்தை வேண்டாம்னு அடம்பிடித்த அமலா பால் – அதிர்ச்சி தகவல்!

குழந்தை வேண்டாம்னு அடம்பிடித்த அமலா பால் – அதிர்ச்சி தகவல்!

கேரளாவில் பிறந்து வளர்ந்த அமலா பால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிந்து சமவெளி திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். அதை அடுத்து மைனா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ் பெற்றார்.

அந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகை அமலா பால் தெய்வத்திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதையடுத்து ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து லிவிங் லைஃப் வாழ்ந்து பின் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர், சபிதா ஜோசப் அமலா பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், “நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் நடிப்பேன் என்றும், குழந்தை எல்லாம் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அடம் பிடித்தார். இதனால் தான் அவர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். ஆனால், தற்போது ஜகத் தேசாயை திருமணம் செய்துக்கொள்வதற்கு முன்னரே கர்ப்பமாகி இப்போது குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.