எல்லைமீறிய கவர்ச்சியால் எகிறி மார்க்கெட்… தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய அனுபமா!

எல்லைமீறிய கவர்ச்சியால் எகிறி மார்க்கெட்… தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய அனுபமா!

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனுபமா. இவர் முதல் படமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதால் தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் பல கிடைக்கிறது.

இதனிடையே தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் இவர் நடித்த வருகிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமாகினார் . தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வரும் அனுபமா கடைசியாக அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் தாறுமாறான கிளாமர் காட்ட இறங்கினார்.

அதன்படி கார்த்திகேயா 2 மற்றும் டில்லு ஸ்கொயர் என்ற திரைப்படத்தில் படு கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் என முகம் சுளிக்க வைத்தபடி நடித்திருந்தார். இவரது எல்லை மீறிய கிளாமரை பார்க்க ரசிகர் இளைஞர்கள் கூட்டம் படையெடுத்து தியேட்டருக்கு வந்தது.

இதனால் இந்த படம் கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுப்பமா ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தற்போது அதனை ரூ. 2 கோடியாக உயர்த்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். இதை அடுத்து முன்னணி நட்சத்திர நடிகையாக அனுபமா இடம் பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.