அரவிந்த் சுவாமியின் மகளை பார்த்திருக்கீங்களா? வைரல் புகைப்படம் இதோ!

அரவிந்த் சுவாமியின் மகளை பார்த்திருக்கீங்களா? வைரல் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் ஆண் அழகன் , பெண்களின் கனவு நாயகன் இப்படி தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி இழுத்தவர்தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவ ராகம், அலைபாயுதே போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார். முதன் முதலில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தளபதி திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகி இருந்தார் .

அதன் பிறகு ரோஜா திரைப்படம் இவரை மிகப்பெரிய அளவில் உயர்த்தி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்தது. இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 16 ஆண்டு வாழ்க்கைக்கு பிறகு தனது மனைவியை கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் நடிகர் அரவிந்த்சாமி.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி தனது மகளை அமரவைத்து சைக்கிள் ஓட்டும் க்யூட்டான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமியின் மகளா இது? இம்புட்டு அழகா இருக்காங்களே என அவரை வர்ணித்து இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.

athirvu