அடுத்த விவாகரத்து… காதல் கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பாவனா?

அடுத்த விவாகரத்து… காதல் கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பாவனா?

மலையாள நடிகையான பாவனா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதை எடுத்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த பெரும் பாராட்டுகளை பெற்ற அவர் தொடர்ந்து தீபாவளி ,ஜெயம் கொண்டான், அஜித்துடன் அசல், கூடல் நகர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வந்தார்.

மிகவும் பவ்யமாக ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அழகில் வசீகரித்து இழுத்த பாவனா பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே பாலியல் தொல்லைக்கு ஆளாகி சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான கன்னட திரைப்பட தயாரிப்பாளரான நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில். நடிக்க தொடங்கி இருக்கிறார் இதனிடையே சமீபத்தில் பாவனா காதல் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என்று தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் பாவனா, கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.