கனடாவை உலுக்கப்போகும் பிரமாண்ட நிலநடுக்கம்! சுனாமிக்கும் வாய்ப்பு! பீதியில் மக்கள்!

கனடாவை உலுக்கப்போகும் பிரமாண்ட நிலநடுக்கம்! சுனாமிக்கும் வாய்ப்பு! பீதியில் மக்கள்!

கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் அதனை ஒட்டிய அமெரிக்கப் பகுதிகளை (கலிபோர்னியா, ஒரிகன், வாஷிங்டன்) உள்ளடக்கிய “காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலம்” (Cascadia Subduction Zone) என்றழைக்கப்படும் பகுதி அமைதியாக இருந்தாலும், அது ஒரு பெரிய பூகம்பத்தை உருவாக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்டலத்தில் பெரிய நிலநடுக்கம் எதுவும் நிகழவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் இது நிச்சயம் உடையும் என்றும், அது மிகப் பெரிய நிலநடுக்கத்தையும், அதைத் தொடர்ந்து சுனாமியையும் ஏற்படுத்தி, கனடா மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியை கடுமையாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கனடாவின் யுகோன் மற்றும் அலாஸ்கா வழியாகச் செல்லும் சுமார் 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள டின்டினா ஃபால்ட் (Tintina Fault) என்றழைக்கப்படும் பிளவு, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அழுத்தம் குவிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பிளவு பிரிட்டிஷ் கொலம்பியா வழியாகச் சென்று தெற்கு கனடாவில் உள்ள மற்றொரு பெரிய பிளவுடன் இணைகிறது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்த பிளவு பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2.6 மில்லியன் ஆண்டுகளில் அதன் இரு பக்கங்களும் 1,000 மீட்டர் அளவுக்கு சரிந்துள்ளன. கடந்த 1.36 லட்சம் ஆண்டுகளில், 75 மீட்டர் சரிந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக நகர்ந்து வருவதால், இந்த பிளவில் அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் அளவுக்கு அதிக அழுத்தம் அடைந்துள்ளது. கிட்டத்தட்ட 6 மீட்டர் அளவுக்கு அழுத்தம் குவிந்திருப்பது, ஒரு பெரிய நிலநடுக்கத்திற்கு போதுமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கம் எப்போது நிகழும் என்று யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.