Posted in

ஜப்பானில் மீண்டும் பூகம்பம் 6.7! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது: மக்கள் மத்தியில் பீதி! 

டோக்கியோ, டிசம்பர் 12 (ரெய்ட்டர்ஸ்) – ஜப்பானின் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், அச்சமும் நிலவி வருகிறது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும் என சுனாமி எச்சரிக்கையை அவசரமாக விடுத்துள்ளது!

இன்று காலை 11:44 மணியளவில் (0244 GMT) ஆமோரி மாகாணத்தின் கடலோரப் பகுதியில் 20 கிமீ (12 மைல்) ஆழத்தில் இந்த அதிர்வு தாக்கியுள்ளது.

அதிர்ச்சி! மீண்டும் அதே பிராந்தியம்!

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை இரவு அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் தாக்கிய நிலையில், மீண்டும் சில நாட்களிலேயே இந்த பயங்கர அதிர்வு ஏற்பட்டிருப்பது ஜப்பான் மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திங்கட்கிழமை நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கில் உள்ள ஹொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கில் உள்ள சிபா வரையிலான பரந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசாங்கம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் ஜப்பான் முழுவதும் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது!