அறந்தாங்கி நிஷா வீட்டில் சூப்பரான விஷேஷம் – களைகட்டிய குடும்பம்!

அறந்தாங்கி நிஷா வீட்டில் சூப்பரான விஷேஷம் – களைகட்டிய குடும்பம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நகைச்சுவை நடிகையும் ,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அறந்தாங்கி நிஷா பல்வேறு பேச்சுப் போட்டிகளில் கலந்துக்கொண்டு தனது கலகலப்பான பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனம் கவந்தார் .

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மாரி 2 ,ஆண் தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் அறந்தாங்கி நிஷா வீட்டில் ஒரு சூப்பரான விசேஷம் நடந்துள்ளது. ஆம், அவரது மகளின் காது குத்தல் விழா மிகவும் கோலாகலமாக உறவினர்கள் சூழ நடந்துள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிஷா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, அன்பு உறவுகளுக்கு வணக்கம் சஃபா பாப்பாவுக்கு காது குத்தியாச்சு, கண்டிப்பா உங்களுடைய வாழ்த்துகளோடு, அவள் நீண்ட ஆயுளோடு, நல்ல கல்வி செல்வத்தோடு இருக்க வேண்டும் என்று நானும் வாழ்த்துகிறேன், கண்டிப்பா உங்க வாழ்த்து வேணும் என பதிவிட்டுள்ளார்.