Posted in

என் வாழ்க்கையை நாசம் பண்ணிய ஏ.ஆர்.ரகுமான்! – கொதித்துப்போன பிரபல இயக்குனர்!

இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மீது பிரபல இயக்குனர் ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்க்கையை அழித்துவிட்டதாக அவர் பகிரங்கமாகப் பேசியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இயக்குனர் பிரவீன் காந்தியின் ஆவேசம்!

  • ஒரு காலத்தில் ‘ரட்சகன்’, ‘ஜோடி’ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் பிரவீன் காந்தி.
  • சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், அவர் தனது வாழ்வின் சரிவுக்கு ஏ.ஆர்.ரகுமானே காரணம் எனக் கூறியுள்ளார்.
  • “ரட்சகன் படத்தின் இந்தி உரிமையை என்னிடம் கொடுத்திருந்தால், நான் இன்று பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக இருந்திருப்பேன். ஆனால், ஏ.ஆர்.ரகுமான் அதற்கு வழிவிடவில்லை. என் வாழ்க்கையை அவர்தான் காலி பண்ணிட்டார்” என அவர் கொதித்துள்ளார்.

சர்ச்சை ஏற்படுத்தும் பேச்சு!

பிரவீன் காந்தியின் இந்த பேச்சு சினிமா துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு சிலர், ரகுமானின் சாதனைகளை குறைத்து மதிப்பிடும் வகையில் இப்படியொரு குற்றச்சாட்டை வைப்பது தவறு என கருத்து தெரிவித்து வருகின்றனர். நமக்கு உதவியவர்கள் இருந்தாலும், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் என சிலர் பிரவீன் காந்திக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் இருந்து எந்தவித கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.

Loading