நடிகர் அஜித்குமார் தற்போது ஸ்பெயினில் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளத் தயாராகி வரும் நிலையில், அவரது அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘AK 64’ கூட்டணி உறுதி!
அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்தப் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக நீண்ட நாட்களாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது, இந்தக் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘ஏகே 64’ என்ற தற்காலிகப் பெயரில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
வைரலாகும் பிறந்தநாள் புகைப்படம்!
படத்தின் தயாரிப்பாளர் ராகுல் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருடன் அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஒரு புகைப்படம் மூலம், அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் இரண்டாவது பாகம் உறுதியாகி உள்ளது.
இந்தப் புகைப்படத்தை அடுத்து, நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கும் ‘ஏகே 64’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.