சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ‘கூலி’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில், “நான் அனிருத் இல்லாமல் ஒரு படம் கூட பண்ண மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், “ஒருவேளை எங்களில் ஒருவர் சினிமாவில் இருந்து விலகினால், அப்போது வேண்டுமானால் யோசிக்கலாம்,” என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் சினிமா உலகில் நுழைந்தது முதல், அனிருத்துடன் இணைந்துதான் பணியாற்றி வருகிறார். ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என அவர்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு லோகேஷ் மற்றும் அனிருத்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் இந்த வெற்றி கூட்டணி தொடர்ந்து பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.