அதிரடி அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு மாபெரும் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது! இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த விழாவில், ரசிகர்களை பிரமிக்க வைக்கப் போகும் அந்த ‘மாஸ்’ சர்ப்ரைஸ் என்னவென்று தெரியுமா? ‘கூலி’ படத்தின் பிரமாண்டமான ட்ரெய்லர் வெளியீடுதான்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், திரையுலகில் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வாகவும் அமையவிருக்கிறது.
அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு படத்தின் எதிர்பார்ப்பை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இது ரஜினிகாந்தின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.