சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ஸை சென்னையில் தொடங்கினார். இந்த நிகழ்வில் அவர் தனது முதல் படமான ‘An Ordinary Man’ மூலம் இயக்குநராக அறிமுகமாவதாக அறிவித்தார். இந்த படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸை தனது “இந்தப் பயணத்தின் கூட்டாளி” (partner in this journey) என்று குறிப்பிட்டுப் பேசினார். “இந்த நிகழ்வு கெனிஷா இல்லாமல் நடந்திருக்காது. இவ்வளவு பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் இதை சாத்தியமாக்கினார். வாழ்க்கையில் ஒரு மனிதன் சிக்கலில் இருக்கும்போது, கடவுள் ஒரு வழியில் ஒரு தீர்வை அனுப்புவார். எனக்கு, கெனிஷா தான் அந்தப் பரிசு. அவர்தான் நான் யார் என்பதை எனக்கு உணர்த்தினார்” என்று ரவி மோகன் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
கெனிஷா பிரான்சிஸ், ஒரு பாடகி, இசை அமைப்பாளர் மற்றும் ஆன்மீக சிகிச்சையாளர் ஆவார். ரவி மோகனின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட அவர், “ரவி மோகன் ஸ்டுடியோஸில் கூட்டாளியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். ரவி மோகன் ஏழு முழுமையான திரைக்கதைகளை எழுதி வைத்திருப்பதாகவும், அவரது திறமையை உலகம் காண தான் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.