தளபதி விஜய்யின் அரசியலில் திடீர் திருப்பம்! பிரபல நடிகை இணைந்தாரா?

தளபதி விஜய்யின் அரசியலில் திடீர் திருப்பம்! பிரபல நடிகை இணைந்தாரா?

அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு மேலும் ஒரு நட்சத்திர பிரபலம் இணைய உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன!

“நமது நாட்டின் ஜனநாயகத்தில் மக்கள் சேவை செய்ய யாருக்கும் எந்த தடையும் இல்லை” என நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அரசியல் தலைவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தளபதி விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

முன்னர், திரிஷா அரசியல் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறிய நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது, விஜய்யின் அரசியல் பயணத்தில் திரிஷாவும் இணையலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன.

இது குறித்து த்ரிஷா தரப்பிலோ அல்லது விஜய்யின் அரசியல் கட்சியிடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

த்ரிஷா உண்மையிலேயே விஜய்யின் கட்சியில் இணைவாரா? அரசியல் களத்தில் இது எந்த மாற்றத்தை ஏற்படுத்தும்? பொறுத்திருந்து பார்ப்போம்!