மதுரையில் நடந்த ‘தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் மாநாட்டில், நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்டார். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த மாநாட்டில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது மேடையில் இருந்த விஜய், ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து சில வினாடிகள் உணர்ச்சிவசப்பட்டார். கண்கலங்கிய நிலையில், அவர் தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் ஷோபா ஆகியோரை அணைத்துக்கொண்டார்.
கட்சியின் மாநாடு என்றாலும், ரசிகர்கள் தங்கள் தலைவருடனான உணர்வுபூர்வமான உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்ததாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வின் புகைப்படங்களும் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு, முழு நேர அரசியல் வாழ்க்கையில் ஈடுபட உள்ளதால், ‘ஜன நாயகன்’ திரைப்படம் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்துள்ளார். இந்த நிலையில், அரசியல் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கும் ஒவ்வொரு தருணமும் ரசிகர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.